• Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to footer

Workers Action Centre

Organizing for Fair Employment

  • About
    • Contact us
  • Policy papers
  • Resources
  • Updates
    • Know Your Rights!
  • In the media
  • Stop Wage Theft
  • Join us
  • Support us
  • Know Your Rights
  • Know Your Rights
  • 知道你的权益
  • Conozca sus derechos
  • உங்கள் உரிமைகள்
  • Ogow xuquuqdaada
  • ਆਪਣੇ ਹੱਕਾਂ ਬਾਰੇ ਜਾਨਣ ਲਈ
  • আপনার অধিকার সম্পর্কে জানুন

ஒன்றாரியோவின் அடிப்படைச் சம்பளம்

(Minimum Wage - Tamil)

September 30, 2024

  • நீங்கள் செய்யும் ஒவ்வொரு மணித்தியால வேலைக்கும் ஆகக் குறைந்தது $17.20 அடிப்படைச் சம்பளம் வழங்கப்படல் வேண்டும்
  • 18 வயதுக்குக் குறைந்த மாணவர்களுக்கான அடிப்படைச் சம்பளம் $16.20 ஆகும்
  • எனினும், சில தொழில்களைப் பொறுத்து அடிப்படைச் சம்பளம் கிடைக்காமல் விடலாம். உதாரணமாக, பண்ணை மற்றும் தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள், கட்டிட மேலாளர்கள் (superintendents) போன்றோர் அடிப்படைச் சம்பள சட்டத்திற்குள் இல்லாதவர்கள்
வயது வந்தோருக்கான அடிப்படைச் சம்பளம் 18 வயதுக்கு குறைந்த மாணவர்களுக்கு
ஒக்டோபர் 1, 2024 $17.20 $16.20
ஒக்டோபர் 1, 2025 $17.60 $16.60

 

எனக்கு சரியாக சம்பளம் வழங்கப்படவில்லையாயின் நான் என்னை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?

  • உங்களது முதலாளி அடிப்படைச் சம்பளத்தினை விட குறைவாக செலுத்துவாராக இருந்தால், வேலை செய்த திகதிகள், மணித்தியாலங்கள் மற்றும் உங்களுக்கு செலுத்தப்பட்ட கூலி என்பவற்றை எழுத்தில் குறித்து வைத்துக்கொள்ளவும்.
  • போதுமான தகவல்களை முடிந்தவரை சேகரிக்கவும். வேலை ஒப்பந்தம், அட்டவணைகள், படங்கள் மற்றும் குறுந்தகவல்கள் (text messages) யாவற்றையும் இது உள்ளடக்கும்.
  • சேகரிக்கப்பட்ட தகவல்கள் தவறவிடப்படுமாக இருந்தால், இன்னொரு வகையில் உங்களது தொலைபேசி, மின்னஞ்சல், வேலைத்தள பதிவுகள் என்பவற்றிலும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிரதிகள் அல்லது ஸ்க்ரீன் ஷாட் (screenshots) எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
  • உங்களுக்கு அடிப்படைச் சம்பளம் வழங்கப்படாதிருந்தால் தொழிலாளர் நடவடிக்கை நிலையத்தின் தொலைபேசி எண்: 416-531-0778 ல் எங்களை அழையுங்கள். நாம் ஒருமித்து செயற்பட்டு, உங்களுக்கான கொடுப்பனவுகளைப் பெற உதவ முடியும்.

 

ஒன்றாரியோவின் அடிப்படைச் சம்பளம் ஏன் உயர்வடைகின்றது?

  • ஒவ்வொரு வருடமும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு இணையாக தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் உயர்வடைய வேண்டும் என்று ஒன்றாரியோ தொழிலாளர்கள் போராடி, 2014 ல் அதற்கான சட்டத்தினை வென்றெடுத்ததனர். உணவு, வாடகை மற்றும் போக்குவரத்துச் செலவுகளையும் இது உள்ளடக்கின்றது.
  • 2014 ஆம் ஆண்டு சட்டத்திற்கு முன்னர், ஒன்றாரியோ அரசுக்கு அடிப்படை சம்பள உயர்வினை நிறுத்தி, உரைநிலையில் வைப்பதற்கு இலகுவாக இருந்தது. கன்சர்வேட்டிவ் அரசு அடிப்படைச் சம்பளத்தினை $6.85யில் 9 வருடங்களுக்கு நிறுத்தி (froze) வைத்திருந்தது.
  • எனது சம்பளங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட பொழுதிலும் விலைவாசிகள் மேலே செல்கின்றன. இது எமது முதலாளி எமது சம்பளத்தினை வெட்டுவதற்கு சமமாகும். இதன் காரணமாகவே வென்றெடுக்கப்பட்ட இந்த சட்டமானது பல தொழிலாளர்களைப் பொருத்தவரையில் மிகவும் முக்கியமானது.
  • ஆனால் $17.20 என்பது இன்னும் போதுமானதல்ல. கூடுதலான தொகையினைப் பெறுவதற்கு தொழிலாளர்களுக்கு உரித்து உண்டு.எனவே, எந்த ஒருவரும் ஏழ்மைச் சம்பளத்தை (poverty wages) பெறாத வகையில் ஒன்றாரியோ அரசு அடிப்படை சம்பளத்தினை உயர்த்துதல் வேண்டும்.

 

ஏப்ரல் 2025 ல் திருத்தப்பட்டது

Footer

Sign up for Action Alerts

  • Facebook
  • Instagram
  • Twitter

© 2025 Workers Action Centre | Organizing for Fair Employment | Sitemap