Tamil
தொழிலாளர் நடவடிக்கை நிலையத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
குறைந்த வருமானத்திலும், நிரந்தர மற்றும் நிலையற்ற தொழில புரியும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தையும் அவர்களின் தொழில் தராதரங்களையும் மேம்படுத்துவதற்காக எமது அமைப்பும் எமது அங்கத்துவர்களும் தம்மை அர்ப்பனித்துள்ளனர்.
நாம் அனைவரும் மரியாதையாகவும், நியாமாகவும் எமது தொழில்புரியுமிடங்களில் நடாத்தப்படுவதுடன் எங்களது குரல்கள் வேலைத்தளத்தில் ஒலிப்பதையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும். இந்த இணையத்தளத்தின் பக்கத்தில் “தொழில் புரியுமிடங்களில் உள்ள உங்களது உரிமைகள் பற்றிய தகவலடங்கிய நூல் மற்றும் பிரசுரங்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். உங்களிற்கு, உங்கள் வேலைசெய்யுமிடங்களில் நீங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான கேள்விகள் இருப்பின் மற்றும் ஆலோசனைகள் தேவைப்படின் எங்கள் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெறலாம். தொலைபேசியில் அழைக்கும்போது தமிழில் உரையாடவேண்டும் எனில், அதனை தெரிவிப்பின் தமிழில் பேசுவதற்காக உங்களை தமிழ் பேசும் எமது உத்தியோத்தரிடம் தொடர்பு ஏற்படுத்தி தரப்படும். எமது சேவைகள் அனைத்தும் இலவசம். தொழிலாளர்களிற்கு தொழில் செய்யுமிடங்களில் பாதுகாப்பு தேவையென்றும், மற்றும் மக்களின் சம்பளம் மற்றும் வேலை நிலைகளின் முன்னேற்றம் ஏற்றபட வேண்டும் என்றும் நீங்கள் கருதினார் எங்களது அமைப்பில் இணைந்து இந்த சட்டமாற்றத்திற்கான உங்களது பங்களிப்பினை வழங்குங்கள்.