முதல்வர் டக் ஃபோர்ட் முன்கூட்டியே ஒன்ராறியோ தேர்தலுக்கு அழைப்பு விடுத்து, பெப்ரவரி 27,2025ஐ வாக்களிக்கும் நாளாக அறிவித்துள்ளார். போதிய தொழில் பாதுகாப்பின்மை மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொள்ளும் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் இந்த தேர்தல் முக்கியமானதாகும். வாக்களிக்க முடிகிறதோ இல்லையோ, தொழிலாளர் சக்தியைக் கட்டியெழுப்பும் நேரம் இதுவாகும்!
ஃபோர்ட் ஒரு வருடத்திற்கு முன்னதாக தேர்தலை நடத்துவதற்கான சாத்தியமான காரணங்கள்:
1. பிரீமியர் ஃபோர்ட் கடந்த ஆண்டு தங்கள் வரிகளை தாக்கல் செய்த ஒன்றாரியோ மக்களுக்கு $200 காசோலைகளை அனுப்பியுள்ளார்.தேர்தல் நாளில், மக்கள் Ford இன்இந்த $200 காசோலையின் நினைவுடன் வாக்களிப்பார்கள்.
2. அமெரிக்க அதிபர் டிரம்ப் பிப்ரவரி 1 முதல் கனேடிய ஏற்றுமதிகளுக்கு 25% வரியை(Tariff)அமுல்படுத்த திட்டமிட்டுள்ளார். இது கனேடிய வணிகங்களையும் தொழிலாளர்களையும் பாதிக்கும். ஒன்றாரியோவைப் பாதுகாக்க விரைவாகச் செயல்பட தனக்கு ஒரு புதிய ஆணை தேவை என்று ஃபோர்ட் கூறுகிறார். (எவ்வாறாயினும், இந்த வரி அமுலுக்கு வந்து 4 வாரங்களாகிவிடும் வேளையில், எங்களை இந்த வரிகளிலிருந்து பாதுகாப்பதற்குப் பதிலாக தேர்தலை நடத்துவதிலும், கட்சிகள் பிரச்சாரத்திலுமே மும்முரமாக இருப்பார்கள்).
3. பின்வரும் விடயங்களில் மோசமான பத்திரிகை விமர்சனங்களிலிருந்து முன்னமே தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆகும். ஃபோர்டு அரசாங்கத்தின் க்ரீன்பெல்ட்டை (Greenbelt) (விளைநிலங்கள், காடுகள், ஈரநிலங்கள் மற்றும் நீர்நிலைகள் ஆகியவற்றின் பாதுகாக்கப்பட்ட பகுதி) தனியார் டெவலப்பர்களுக்குத் திறந்ததற்கான RCMP குற்றவியல் விசாரணை(an RCMP criminal investigation on the Ford government’s decision). மேலும், ஒன்றாரியோவின் நிதிப் பொறுப்புக்கூறல் அலுவலகம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.அதில் மதுபானத்தை கன்வீனியன்ஸ் கடைகளில் விற்பதனை விரைவுப் படுத்த வரி செலுத்துவோரின் பணத்தில் $600 மில்லியனை கூடுதலாக செலவிட்டதாகும்( expand alcohol into convenience stores early cost taxpayers an extra $600 million).
இதில் தொழிலாளர்களுக்கு என்ன முக்கியமாக உள்ளது?
பிரீமியர் ஃபோர்ட் பதவியேற்றதிலிருந்து, அவரது அரசாங்கம் மீண்டும் மீண்டும் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்குப் பதிலாக,பெரிய வர்த்தக, வணிக நிறுவனங்களுக்கே முக்கியத்துவம் வழங்கி வந்துள்ளது. இதே போன்ற முடிவுகளை இன்னும் 4 ஆண்டுகளுக்கும் நாங்கள் பெற விரும்பவில்லை:
1. கடந்த நவம்பரில், ஒன்ராறியோ அரசாங்கம் தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் காப்பீட்டு வாரியத்திடம் (WSIB) இருந்து $2.5 பில்லியனை எடுத்து வணிகங்களின் பைகளில் வைப்பதாக அறிவித்தது. ஆனால் காயமடைந்த தொழிலாளர்கள் இன்னும் வறுமையில் வாழ்கின்றனர்.
2. ஃபோர்ட் அரசாங்கம் “தொழிலாளர்களுக்கான வேலை” (Working for Workers) தொழிலாளர் சட்டங்களின் ஐந்து தொகுப்புகளை நிறைவேற்றியது, ஆனால் தொழிலாளர்களை உண்மையாகப் பாதுகாக்கும் மாற்றங்களை அவர்களால் இன்னும் செய்ய முடியவில்லை.
3. ஃபோர்ட் அரசாங்கத்தின் கீழ் ஊதிய/சம்பளத் திருட்டு (wage theft ) மிக அதிகமாக உள்ளது. இந்த அரசு ஆண்டு 2018 மற்றும் 2025 க்குமிடையில் கிட்டத்தட்ட $60 மில்லியன் தொழிலாளர்களிடமிருந்து திருடப்பட்ட சம்பளத்தினை மீட்கத் தவறி உள்ளது ($60 million in unpaid wages).
தொழிலாளர்கள் என்ன செய்ய முடியும்?
நமக்குத் தேவையானதைப் பெறுவதற்காக நாம் ஒன்றுசேர்ந்து நடவடிக்கைகளில் இறங்கும்போது உண்மையான மாற்றம் வரும் என்பதை நாம் அறிவோம்.
- அரசியல்வாதிகளுடன் பேசுவதற்கும், உங்கள் அண்டை வீட்டாருடன்/ அயல் சமூகத்தினருடன் ஆழமாக கலந்துரையாடுவதற்கும் வழிகாட்டியாக, உங்கள் வேட்பாளர்களிடம் கேளுங்கள் (Ontario Election 2025 Questions) என்ற இந்த (ஆங்கிலத்திலுள்ள) கையேட்டைப் பயன்படுத்தவும்.
- கூலி/சம்பளத் திருட்டை நிறுத்தும் நோக்குடன், உங்கள் நண்பர்களை Stop Wage Theft என்ற ஈமெயிலிலை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பி வைப்பதன் மூலமாக எமது இயக்கத்தில் சேரச் சொல்லுங்கள். உங்கள் அடுத்த WAC நிகழ்வுக்கு அவர்களை அழையுங்கள்!
தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும் கூட, நாம் தொழிலாளர்கள் சக்தியை கட்டியெழுப்பவும், தொழிலாளர்களுக்கான நீதிக்காகத் (Justice for Workers)
தொடர்ந்து போராடவும் வேண்டும்.