ஏப்ரல் 2 ஆம் திகதி கனேடியப் பொருட்களுக்கு அதிக ஏற்றுமதி இறக்குமதி வரிகள்(tariffs)நிர்ணயிக்கப்பட்டு, ஏப்ரல் 28 ஆம் திகதி ஓர் உடனடி மத்திய அரசுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாம் செய்யும் பிரச்சார நடவடிக்கைகளின் ஒவ்வொரு தருணமும் மிக முக்கியமானது. அவசர டவுன் ஹாலில் (இங்கே காணொளியைக் காண்க (find the video here) கலந்து கொண்டதிலிருந்து, WAC உறுப்பினர்கள் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு, அவசரகால ஆதரவுகளுக்கான போராட்டத்தில் மக்களை சேருமாறு கேட்டு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். நீங்கள் என்ன தகவல்களை தவறவிட்டிருக்கலாம், என்ன வரப்போகிறது என்பது பற்றிய ஓர் விளக்கம்( update)இங்கே தரப்படுகின்றது.
எவரும் ஒதுக்கப்படவில்லை (No One Left Behind)
ஏற்றுமதி இறக்குமதி வரி (tariffs)அமெரிக்காவிற்குள் செல்லும் கனடியப் பொருட்களின் விலைகளை உயர்த்தும். அமெரிக்க வியாபாரங்கள் மற்றும் அங்குள்ள நுகர்வோரும் கனடாவிலிருந்து வரும் அதிக விலை கொண்ட பொருட்களை வாங்காமல் விடும்போது, இங்குள்ள தொழிலகங்கள் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலை
நீக்கம் செய்யக்கூடும்.
இந்த வரிகள் நமது பொருளாதாரத்தில் ஓர் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், பாரிய கூட்டுத்தாபனங்களுக்கு பண உதவிகளை வழங்குவதுடன் ஒரு சில தொழிலாளர் குழுக்களுக்கு சிறிய உதவிகளை மட்டுமே வழங்கும் அரசாங்கத்தின் தற்போதைய உத்தி, பொருளாதார பேரழிவைத் தடுக்க நமக்குப் போதுமானதல்ல.
அனைத்து அரசாங்க மட்டங்களிலும் உள்ளவர்கள் போதுமானதும் மற்றும் பரவலாக அணுகக்கூடியதான வருமான ஆதரவை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்:
- வேலைக்காப்புறுதி அல்லது வழக்கமான சலுகைகளை அணுக முடியாதவர்களுக்கு நேரடி மானியங்கள் மூலம் வாரத்திற்கு $600.00 க்குக் குறையாத வருமான ஆதரவு. இதில் தவறாக வகைப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளடக்கப்படல் வேண்டும்.
- வேலைக்காப்புறுதியில் நிலவும் குறைபாடுகளை நிரந்தரமாக சரிசெய்யவும்.
- உணவு விலை அதிகரிப்பில் முடக்கம் வேண்டும்.
- வெளியேற்றங்களுக்கு ஒரு தடையை அமல்படுத்த வேண்டும்.
- முக்கியத் துறைகளில் நீடித்த தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பொதுவில் வழங்கப்படும் சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, குழந்தை பராமரிப்பு மற்றும் பிற பொது சேவைகளுக்கான பொது நிதியை அதிகரிக்கவும்.
- இலாபகரமான நிறுவனங்களும் செல்வந்தர்களும் பொது உள்கட்டமைப்பு மற்றும் பொது சேவைகளுக்கு நிதியளிக்க தங்கள் நியாயமான வரிகளை செலுத்துவதனை உறுதி செய்தல் வேண்டும்.ஏனெனில் அவர்கள் இந்த முதலீடுகளிலிருந்து நிறையவே பயனடைகின்றார்கள்.
பெரிய நிறுவனங்கள் தங்கள் வரிகள் மூலம் அதிக டாலர்களை நமது பொது சேவைகளுக்கு நிதியளிக்க முடியும். சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற சேவைகளை அரசிடம் வைத்திருப்பது மூலம் தான் எங்களைப் போன்ற தொழிலாளர்கள் அவற்றை பெறக்கூடிய ஒரே வழி. நன்கு நிதியளிக்கப்பட்ட பொது சேவைகள் அதிக பொதுத்துறை தொழில் வாய்ப்புக்களை உருவாக்குகின்றன. இது தொழிலாளர்கள் மற்றும் எங்கள் சமூகங்கள் சிறந்த சேவையைப் பெறுவதை உறுதி செய்கின்றது.
உதாரணமாக, ஃபோர்டின் சுகாதாரப் பராமரிப்புக்கான குறைவான நிதி ஒதுக்கீடு ஆபத்தானது என்பதை ஒன்ராறியோ செவிலியர்கள் சங்கம் அறிந்திருக்கிறது. எங்கள் மருத்துவமனைகளில் கடுமையான பணியாளர் பற்றாக்குறை நோயாளிகளுக்கு பாதுகாப்பான சேவைகளை வழங்க முடியாமல் செய்வதுடன், செவிலியர்கள்/நர்ஸ்மார்கள் அதிக வேலைப்பளுவுடன் ஓயாமல் சேவையாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். செவிலியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த ஊழியர்கள் மார்ச் 20 அன்று 183 மருத்துவமனைகளில் சிறந்த செவிலியர்-நோயாளி விகிதங்களைக் (better nurse-to-patient ratios)கோரி நடவடிக்கை எடுத்தனர்!
தொழிலாளர்களை முதன்மைப்படுத்தி நமது சமூகங்களில் முதலீடு செய்ய அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களையும் வலியுறுத்த வேண்டிய நேரம் இது.
ஒன்ராறியோ தேர்தல் முடிவுகள்
ஒன்ராறியோ தேர்தல் எதிர்பார்த்ததை விட ஒரு வருடம் முன்னதாகவே நடந்து முடிந்துள்ளது. இது பிரீமியர் ஃபோர்ட் வெற்றி பெறுவதற்கு நல்ல வாய்ப்பினைக் கொடுத்திருந்தது. குறைந்த நேரமும், அதிக பனிப்பொழிவும் இருந்ததால், பலருக்கு தங்கள் வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறியவோ அல்லது தங்கள் அயலாருடன் பேசவோ வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை. ஃபோர்ட் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், அவரது கட்சிக்கு அவர்கள் நினைத்தளவுக்கு ஆதரவு இல்லை. இந்த வரைபடம்(graphic)ஒன்ராறியோவின் தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களின் தீர்மானங்களையும் காட்டுகிறது:
ஏப்ரல் 28 அன்று மத்திய அரசுக்கான தேர்தல்(Federal Election on April 28)
மார்க் கார்னி இப்போது கனடாவின் லிபரல் கட்சியின் தலைவராக உள்ளார், மேலும் அவர் மார்ச் 14 அன்று புதிய பிரதமரானார். ஏப்ரல் 28 அன்று நடைபெறவிருக்கும் ஒரு விரைவான மத்திய அரசுக்கான தேர்தலுக்கு கார்னி அழைப்பு விடுத்தார். யாரையும் ஒதுக்கி வைக்காமல் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நிகழ்ச்சி நிரலுக்கான எங்கள் கோரிக்கைகள் குறித்து உங்கள் வேட்பாளர்களுடன் பேச வேண்டிய நேரம் இது! உங்கள் மத்திய அரசின் மற்றும் மாகாண பிரதிநிதிகளுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் Send an email. உங்கள் வேட்பாளர் உங்கள் கதவைத் தட்டினால் அல்லது ஒரு சமூக நிகழ்வில் கலந்து கொண்டால், அவர்கள் தொழிலாளர்களுக்கு அவசரகால உதவிகளை வழங்குவார்களா என்று அவர்களிடம் கேளுங்கள்.
அடிப்படைச் சம்பளத்தில் உயர்வு (Minimum Wage Adjustments)
மத்திய அரசின் கீழுள்ள தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு சரிப்படுத்தலின் பிரகாரம், ஏப்ரல் 1 ஆம் திகதி , அவர்களுக்கான மணித்தியால சம்பளம் $17.30 இலிருந்து $17.75 ஆக உயர்ந்தது. பணவீக்கத்திற்கு ஏற்ப சம்பளமும் அமைந்து இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த வருடாந்த சரிசெய்தலை நாங்கள் வென்றெடுத்தொம்! கனடா மத்திய தொழிலாளர் சட்டத்தின் கீழ் சுமார் 910,000 தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் வங்கி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் சுரங்கம் போன்ற துறைகளில் தொழில் புரிகின்றனர்.
ஒன்றாரியோவின் அடிப்படைச் சம்பளம் அக்டோபர் 1, 2025 அன்று $17.20 இலிருந்து $17.60 ஆக உயரும். இது போதாது என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் இது தொழிலாளர்களுக்கு ஒரு முக்கியமான வெற்றி. 2015 இல், வயது வந்தோருக்கான அடிப்படைச்சம்பளம் $11 மட்டுமே. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, சராசரிச்சம்பளம் 36% குறைந்துள்ளது. ஆனால் நாங்கள் வென்ற சட்டத்தின் காரணமாக, வாழ்க்கைச் செலவைத் தக்கவைக்க அக்டோபரில் அடிப்படைச் சம்பளமானது 61% உயர்ந்திருக்கும்! குறைந்தபட்சம் $20, சம அதாவது ஒரேவிதமான வேலைக்கு சம சம்பளம் மற்றும் இன்னும் பலவற்றிற்காக நாம் தொடர்ந்து போராடுவோம்.
WACயின் மேலதிக தகவல்கள் (WAC Updates)
நாங்கள் இப்போது குறைவாகவே அச்சிடப்பட்ட செய்திமடல்களை அனுப்புகிறோம். மேலும் எவ்வாறு எமது அங்கத்தவர்களை இலகு முறையில் அணுகலாம் என்பதுபற்றி ஆராய்ந்து வருகிறோம். அனைத்து மொழிகளிலும் வழக்கமான புதிய தகவல்களுக்கு, உங்கள் தொலைபேசியில் WhatsApp ஐ பதிவிறக்கம் செய்து WAC உறுப்பினர்கள் செய்திமடல் சமூகத்தில் சேரவும். அல்லது சமூகத்தில் சேர்த்துவிடுமாறு கேட்க Shawna@workersactioncentre.org ஐத் தொடர்பு கொள்ளவும்.
WAC அலுவலகத்தின் புதுப்பித்தல் தொடங்கிவிட்டது! நாங்கள் தற்காலிகமாக அறை 219 இல்(Suite #219) இருக்கிறோம்:
- இந்த தற்காலிக இடத்தில், கணினிகளைப் பயன்படுத்த இனி முன்பதிவு செய்ய முடியாது.
- சந்திப்புகள் முன்பதிவு மூலம் மட்டுமே தொடர்ந்து நடைபெறும்.
வரவிருக்கும் நிகழ்வுகள் (Upcoming Events)
WAC Scarborough Social
Wednesday, April 16, 2025 | 5:30 pm – 7:45 pm
The Hub – Mid Scarborough, 2660 Eglinton Ave E (Brimley & Eglinton)
Scarborough members, please invite other workers in the community who are interested in joining the movement! Register with Shawna@workersactioncentre.org, 416-531-0778 ext 260.
WAC ஆண்டு பொதுக் கூட்டம் (AGM)
திகதி: வெள்ளிக்கிழமை, ஜூன் 20, 2025
நேரம்: மாலை 6:00 – இரவு 8:00
இடம்: ரொரன்ரோவின் பூர்வீக கனடியன் மையம் (NCCT)
16 ஸ்பெடைனா ரோட் (ஸ்பெடைனா சப்வேக்கு வடக்கில்)
Early AGM Notice | Board Nominations
ஜூன் 13 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு முன் பதிவு செய்யவும்.
உங்களுக்கு தங்களது மொழிகளில் விளக்கம் தேவைப்பட்டால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
குழந்தை பராமரிப்பு தேவைப்பட்டால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
இடம் குறைவாக இருப்பதால் உறுப்பினர் அல்லாத வயதுவந்த விருந்தினர்களை அழைக்க வேண்டாம்.