- நீங்கள் செய்யும் ஒவ்வொரு மணித்தியால வேலைக்கும் ஆகக் குறைந்தது $17.20 அடிப்படைச் சம்பளம் வழங்கப்படல் வேண்டும்
- 18 வயதுக்குக் குறைந்த மாணவர்களுக்கான அடிப்படைச் சம்பளம் $16.20 ஆகும்
- எனினும், சில தொழில்களைப் பொறுத்து அடிப்படைச் சம்பளம் கிடைக்காமல் விடலாம். உதாரணமாக, பண்ணை மற்றும் தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள், கட்டிட மேலாளர்கள் (superintendents) போன்றோர் அடிப்படைச் சம்பள சட்டத்திற்குள் இல்லாதவர்கள்
வயது வந்தோருக்கான அடிப்படைச் சம்பளம் | 18 வயதுக்கு குறைந்த மாணவர்களுக்கு | |
ஒக்டோபர் 1, 2023 | $16.55 | $15.60 |
ஒக்டோபர் 1, 2024 | $17.20 | $16.20 |
எனக்கு சரியாக சம்பளம் வழங்கப்படவில்லையாயின் நான் என்னை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?
- உங்களது முதலாளி அடிப்படைச் சம்பளத்தினை விட குறைவாக செலுத்துவாராக இருந்தால், வேலை செய்த திகதிகள், மணித்தியாலங்கள் மற்றும் உங்களுக்கு செலுத்தப்பட்ட கூலி என்பவற்றை எழுத்தில் குறித்து வைத்துக்கொள்ளவும்.
- போதுமான தகவல்களை முடிந்தவரை சேகரிக்கவும். வேலை ஒப்பந்தம், அட்டவணைகள், படங்கள் மற்றும் குறுந்தகவல்கள் (text messages) யாவற்றையும் இது உள்ளடக்கும்.
- சேகரிக்கப்பட்ட தகவல்கள் தவறவிடப்படுமாக இருந்தால், இன்னொரு வகையில் உங்களது தொலைபேசி, மின்னஞ்சல், வேலைத்தள பதிவுகள் என்பவற்றிலும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிரதிகள் அல்லது ஸ்க்ரீன் ஷாட் (screenshots) எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
- உங்களுக்கு அடிப்படைச் சம்பளம் வழங்கப்படாதிருந்தால் தொழிலாளர் நடவடிக்கை நிலையத்தின் தொலைபேசி எண்: 416-531-0778 ல் எங்களை அழையுங்கள். நாம் ஒருமித்து செயற்பட்டு, உங்களுக்கான கொடுப்பனவுகளைப் பெற உதவ முடியும்.
ஒன்றாரியோவின் அடிப்படைச் சம்பளம் ஏன் உயர்வடைகின்றது?
- ஒவ்வொரு வருடமும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு இணையாக தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் உயர்வடைய வேண்டும் என்று ஒன்றாரியோ தொழிலாளர்கள் போராடி, 2014 ல் அதற்கான சட்டத்தினை வென்றெடுத்ததனர். உணவு, வாடகை மற்றும் போக்குவரத்துச் செலவுகளையும் இது உள்ளடக்கின்றது.
- 2014 ஆம் ஆண்டு சட்டத்திற்கு முன்னர், ஒன்றாரியோ அரசுக்கு அடிப்படை சம்பள உயர்வினை நிறுத்தி, உரைநிலையில் வைப்பதற்கு இலகுவாக இருந்தது. கன்சர்வேட்டிவ் அரசு அடிப்படைச் சம்பளத்தினை $6.85யில் 9 வருடங்களுக்கு நிறுத்தி (froze) வைத்திருந்தது.
- எனது சம்பளங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட பொழுதிலும் விலைவாசிகள் மேலே செல்கின்றன. இது எமது முதலாளி எமது சம்பளத்தினை வெட்டுவதற்கு சமமாகும். இதன் காரணமாகவே வென்றெடுக்கப்பட்ட இந்த சட்டமானது பல தொழிலாளர்களைப் பொருத்தவரையில் மிகவும் முக்கியமானது.
- ஆனால் $17.20 என்பது இன்னும் போதுமானதல்ல. கூடுதலான தொகையினைப் பெறுவதற்கு தொழிலாளர்களுக்கு உரித்து உண்டு.எனவே, எந்த ஒருவரும் ஏழ்மைச் சம்பளத்தை (poverty wages) பெறாத வகையில் ஒன்றாரியோ அரசு அடிப்படை சம்பளத்தினை உயர்த்துதல் வேண்டும்.
ஒக்டோபர் 2024ல் திருத்தப்பட்டது